வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
- IndiaGlitz, [Wednesday,October 06 2021]
2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டு ஸ்டாஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டு வரும் இந்த பரிசு பட்டியலில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகள் அடங்கியிருக்கும். நார்வேயில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
மருத்துவம் – கடந்த 4 ஆம் தேதி அறிவிப்பட்ட மருத்துவத் துறைக்கான பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் படாபோஷியன் ஆகிய இருவரின் பெயர்கள் இடம்பிடித்தன. வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்தற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இயற்பியல்- கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இதில் அமெரிக்காவை சேர்த் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ ஆகிய மூவரும் இடம்பிடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் விஞ்ஞானி ஸ்கியூரோ புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ததற்காகவும் மற்ற இருவரும் சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கங்களை அளித்தற்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேதியியல்- இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கிறது. ‘’For the development of asymmetric organocatalysis’’ என்ற பெயரில் ஆராயச்சி செய்ததற்காக இந்த பரிசு வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.