close
Choose your channels

2020 – சனிப்பெயர்ச்சி : சனி பகவான் யாருக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்? யார் வாழ்க்கையைக் கெடுக்க போகிறார்?

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 – சனிப்பெயர்ச்சி :  சனி பகவான் யாருக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்? யார் வாழ்க்கையைக் கெடுக்க போகிறார்?

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, விகாரி வருடம், தை மாதம் 10 ஆம் தேதி அதாவது 24 – ஜனவரி 2020 இல் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்கிறார். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26 டிசம்பர் – 2020 அன்றே சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துவிட்டது.

ஜோதிடத்தில் கிரக நகர்வுகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. நவக்கிரஹங்களில் சந்திரன் 2 ¼ நாட்களும், சூரியன் ஒரு நாளும், புதன் 27 நாட்களும், செவ்வாய் 45 நாட்களும், குரு பகவான் ஒரு ஆண்டும், ராகு – கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளும், சனி 2 ½ ஆண்டுகளும் ஒரு ராசியில் நீடிக்கின்றனர். இதில் சனி பகவான் மெதுவாகத் தனது பயணத்தை நடத்துகிறார். நிழலில் மைந்தன் என்பதால் ஊனமுடையவன் என நம்பப்படுகிறது. எனவே மந்தக்காரன் என்ற பெயரும் சனிக்கு உண்டு. பொதுவாகச் சனி என்பது ஜாதகத்தில் தொழில், ஆயுளைக் குறிக்கிறது எனலாம்.

நவகிரஹகங்களில் சனியைப் பார்த்தால் மட்டும் பயப்படாதவர் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் சனியின் பார்வை மிகக் கொடுமையான காலகட்டமாக அமைந்துவிடுகிறது. அதிலும் 7 ½ சனியென்றால் அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. தற்போது விருச்சிக ராசிக்கு 7 ½ வருட சனி முடிவுக்கு வருகிறது என்பது விருச்சிக ராசியினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் எனலாம்.

கோச்சார பலன்

அதாவது ராசிப்பலன் சொல்லும் போது யாருடைய ஜாதகத்தையும் பார்த்து பலன் கூறுவதில்லை. பொதுவாக 12 ராசிகளையும் லக்கினமாக எடுத்துக்கொண்டு மற்ற கிரகங்களின் நிலைமையைப் பொருத்துத்தான் கோச்சாரப் பலன்கள் சொல்லப்படுகின்றன. இம்முறைப்படி ஒருவருடைய ஜென்ம ராசியை லக்கினமாக வைத்துக் கொண்டே பலன்கள் கணிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சனிப் பெயர்ச்சி, கேது பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி எனப் பொதுவாக பலன்கள் சொல்லப்படும்போது அனைவருக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்தான்.

உதாரணமாக மேஷ ராசிக்காரர்கள் இந்தியாவில் 90 கோடி பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மேஷ  ராசிக்கு 2020 சனிப்பெயர்ச்சி நல்ல பலனைத் தரும் என பொதுப் பலன் சொல்லப்படுகிறது.   எனவே 2020 இல் மேஷ ராசிக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் இது பொதுவான பலனே தவிர ஜென்ம ஜாதகப் பலன் கிடையாது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சனிப்பெயர்ச்சியைப் பற்றிய பொதுவான நம்பிக்கை

சனியைப் போல கொடுப்பாருமில்லை; கெடுப்பாருமில்லை என்ற பழமொழியைக் கேள்விப் பட்டிருப்போம். சனியின் ஆதிக்கம் இருக்கும்போது பல கொடூரமான கெடுதலையும் சனியின் பார்வை நல்ல நிலையில் இருக்கும்போது நற்பலன்களையும் தருவதாக நம்பப்படுகிறது. இதில் ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் 30 வயதைத் தாண்டியவர்கள் குறைந்தபட்சம் 2 முறையாவது சனிப்பெயர்ச்சியைக் கடந்து வந்திருப்பர். எனவே 3 ஆவது சனிப்பெயர்ச்சி பெரிய அளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் நம்பப்படுகிறது.

சனி உழைப்பினை விரும்புவார். எனவே வேர்வை வருமளவிற்கு உழைத்துவிட்டால் பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

நல்ல பலன்கள் பெறப்போகும் ராசிகள்

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் இடம் சரியாக இருந்து, சதா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.

விருச்சிகம் – விருச்சிக ராசயினருக்கு 7 ½ சனி முடிவதால் வாழ்வில் ஏற்றம் பெறும் கால கட்டமாக இந்த சனிப் பெயர்ச்சி அமையும். தைரியம் கூடும்.

மீனம் – இது நாள் வரையிலும் வாழ்வில் மந்தமான நிலையில் இருந்த மீன ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த ஏற்றத்தைத் தரும்.

சிம்மம் – யோகத்தினை அனுபவிக்கும் காலகட்டமாக சனிப்பெயர்ச்சி இருக்கப் போகிறது.

ரிஷபம் – வெற்றி, வேலைவாய்ப்பு என்று புது மனிதாக உருமாறும் வாய்ப்பு அமையும்.

மேஷம் – அஷ்டமச்சனியினை அனுபவித்து அலுத்துப் போயிருக்கும் மேஷ ராசியினர் இனி ஏற்றத்துடனே காணப்படுவர்.  

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஒருவருடைய ஜாதகம் எவ்வளவு நல்லதாக அமைந்திருந்தாலும் பாதக திசைகள் வரும்போது அந்த ஜாதகர் நல்ல பலனை அனுபவிக்க முடியாது. எனவே நல்ல ஜாதகமாக இருந்தாலும் சனி ஆதிக்கத்தில் இருக்கும்போது நல்ல பலன்களைப் பெற இயலாது என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

தனுசு – சனிப்பெயர்ச்சியில் பேச்சில் கவனம் தேவை. வேலையாட்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் கவனத்தோடு செயல்பட்டால் கூடுமான வரையில் நலமாக இருக்கலாம் .

மிதுனம் – அஷ்டமச் சனி வர இருக்கிறது. மற்றவர்களிடம் பொறுமையாக நடந்து கொண்டால் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.  

கடகம் – ராசிக்கு 7 இல் சனி இடம் பெயர இருப்பதால் குடும்பத்தில் சமாதானமாக செல்ல வேண்டும். உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்படலாம்.  குருப் பார்வை இருக்கிறது என்றாலும், இருக்கின்ற வேலையில் தொடர்ந்து இருப்பதே நலம் பயக்கும்.

கன்னி – மற்றவர்களிடம் ஒத்துப்போகின்ற குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  குருவின் பார்வை இருப்பதால் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

துலாம் – பூர்வீகச் சொத்துக்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே உணவு முறைகளில் அக்கறை காட்டினால்   பாதிப்புகள் நேராது.

கும்பம் – சனிக்கு அதிபதியாக கும்பம் என்றாலும் வாகனங்களைக் கவனமுடன் கையாண்டால் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.  

மகரம் – ஜென்மச் சனி வர இருக்கிறது . உணவு முறைகளில் கவனமுடன் இருக்க வேண்டும். செய்து முடிக்க வேண்டிய வேலைகளை உடனடியாகச் செய்து  முடிக்க வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்படும்போது கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் கிடைத்துவிடும்.

கிரஹங்களும் நாட்களும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவைதான் . அந்த இயக்கத்தை ஒருபோதும் மாற்றி அமைக்க முடியாது. எனவே துன்பங்கள் வரப்போகிறது என நீங்களாகவே மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். நன்மையே நடக்கப் போகிறது என நேர்மறையான சிந்தனைகளை வளர்த்து கொண்டால் சனியிலிருந்து மட்டுமல்ல எப்பேர்பட்ட துன்பத்திலும் இன்பத்தை அனுபவிக்கலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment