புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இதிலும் சாதனை புரிந்த இந்தியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பது அந்த குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்து உள்ளது என்ற செய்தியை யுனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
நேற்றைய புத்தாண்டில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அதில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் இந்தியாவில் தான் பிறந்துள்ளன. இந்தியாவில்தான் புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறந்து உள்ளது என்பதை யூனிசெப் உறுதி செய்துள்ளது. அதாவது நேற்றைய புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளின் 17% இந்தியாவில் பிறகு குழந்தைகள் என்பதும் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை அடுத்து சீனாவில் 46,299 குழந்தைகளும் நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும் பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும் அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் புத்தாண்டில் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று புத்தாண்டு பிறந்த ஒரு சில நொடிகளில் பிஜி தீவில் ஒரு குழந்தை பிறந்து உள்ளது என்றும், அந்த குழந்தையே இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படுகிறது என்றும், அதேபோல் நேற்று புத்தாண்டு முடியும் கடைசி ஒரு சில நொடிகளுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும், அந்த குழந்தையை நேற்றைய புத்தாண்டில் பிறந்த கடைசி குழந்தை என்றும் யூனிசெப் அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com