அஜித், விஜய்யை முந்திய இரண்டு முன்னணி நடிகர்கள்!
- IndiaGlitz, [Thursday,December 19 2019]
போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது
இந்த பட்டியலின்படி அஜித்-விஜய் ஆகிய இருவரையும் தென்னிந்திய நடிகர்கள் இரண்டு பேர் முந்தியுள்ளனர். இந்த பட்டியலில் தளபதி விஜய் 47 வது இடத்திலும், தல அஜித் 52 ஆவது இடத்திலும் உள்ளனர். ஆனால் இவர்களைவிட இரண்டு நடிகர்கள் முந்தி உள்ளனர். அவர்கள் மோகன்லால் மற்றும் பிரபாஸ் ஆவார்கள். மோகன்லால் இந்த பட்டியலில் 27வது இடத்திலும் பிரபாஸ் 44 வது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பட்டியலில் 16-வது இடத்தில் ஏஆர் ரஹ்மான் 13-வது இடத்தில் ரஜினிகாந்த் ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் மகேஷ்பாபு 54 வது இடத்திலும், இயக்குனர் ஷங்கர் 44வது இடத்திலும் கமலஹாசன் 56 ஆவது இடத்திலும், மம்முட்டி 62 ஆவது இடத்திலும், தனுஷ் 64 வது இடத்திலும், இயக்குனர் சிவா 80-வது இடத்திலும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 84 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
புகழ்பெற்ற நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரண்டாவது இடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார், மூன்றாவது இடத்தில் சல்மான் கான், நான்காவது இடத்தில் அமிதாப்பச்சன், ஐந்தாவது இடத்தில் தல தோனி, ஆறாவது இடத்தில் ஷாருக்கான், ஏழாவது இடத்தில் ரன்வீர் சிங், எட்டாவது இடத்தில் அலியாபட், ஒன்பதாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பத்தாவது இடத்தில் தீபிகா படுகோனே ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது