20 கோடி பட்ஜெட்.. 200 கோடி வசூல்.. வெற்றி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமான நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த மே மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ’2018’. இந்த படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ஜூட் ஜோசப் என்பவரின் அடுத்த திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் விக்ரம் தற்போது ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் 2018 இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் நடித்து முடித்துள்ள .துருவ நட்சத்திரம். திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments