20 கோடி பட்ஜெட்.. 200 கோடி வசூல்.. வெற்றி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமான நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த மே மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ’2018’. இந்த படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.200 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ஜூட் ஜோசப் என்பவரின் அடுத்த திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் விக்ரம் தற்போது ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் 2018 இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் நடித்து முடித்துள்ள .துருவ நட்சத்திரம். திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா”: ரிலீஸ் தேதி அறிவிப்பு..

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின்

அஜித்தின் வெளிநாட்டு பைக் பயணம்.. மாஸ் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி..!

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் அவர் அஜித்தின் பைக் சுற்றுப்பயண புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய அணி.. 234 தொகுதிகளிலும் பூத் நிர்வாகிகள்.. விறுவிறுப்பாகும் அரசியல் களம்..!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்க்கும் போது அவர் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்.. பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டால் அதற்கு தனுஷ் தான் சரியான நபர் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'ஜெயிலர்' டிரைலர் ரிலீஸ் தேதி.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி மோகன்லால், சிவராஜ்குமார் உள்பட மல்டி ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்