அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு செல்லும் திரைப்படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரை உலகினர்களுக்கு ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த விருதுக்கு திரைப்படங்கள் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’2018’ படம் தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினித் சீனிவாசன், லால், நரேன் உள்பட பலர் நடித்திருந்தனர்

சூப்பர் ஹிட் ஆன இந்த படம் வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 200 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வசூலில் சாதனை செய்த ’2018’ திரைப்படம் ஆஸ்கர் விருதை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.