தங்கையை திருமணம் செய்த பிரபல வீரர்… சமீபத்திய புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் வீரர் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா. இவர் கடந்த 11 வருடங்களாக தனது தங்கையை காதலித்து வந்திருக்கிறார். இதுகுறித்து மீடியாவிடம் தெரிவித்து இருந்தார். பின்னர் கடந்த மாதம் தன்னுடைய தங்கையை பலர் முன்னிலையில் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
முதலில் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா- ஆண்ட்ரியா பெமிண்டா ஜோடியை பார்த்த சிலர் அண்ணன்-தங்கை உறவா? என அதிர்ச்சி வெளியிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இந்த ஜோடி பெற்றோர்களாக மாற இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இதனால் இந்த அண்ணன்- தங்கை ஜோடிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இரத்த உறவில் திருமணம் செய்ய கூடாது என்ற அறிவியல் காரணத்திற்காகவே பல நாடுகளில் அண்ணன்-தங்கை உறவு முறையில் நடக்கும் திருமணத்திற்கு எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா தன்னுடைய தந்தையின் மகளைத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது தனது தந்தைக்கு இரண்டாவது முறையாக நடைபெற்ற திருமணத்தின் மூலம் கிடைத்த தங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் நேரடியான இரத்த உறவுமுறை இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்தியா போன்ற கட்டுப்பாடான கலாச்சாரம் உள்ள நாடுகளில் இத்தகைய உறவுமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும். ஆனால் மிக்குவேல்- ஆண்ட்ரியா பெமிண்டா ஜோடிக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கூடவே ஆண்ட்ரியா பெமிண்டா கர்ப்பமாக இருக்கும் புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments