1000 பேர் கொலையான குஜராத் கலவரம், போலீஸ் மெத்தனம்தான் காரணம்.. முதல்வர் மோடிக்கு சம்பந்தமில்லை.
- IndiaGlitz, [Wednesday,December 11 2019]
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில் -அப்போதைய மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.நானாவதி கமிஷன் அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.டி. நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா ஆகியோர் 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்த இறுதி அறிக்கைகளை 2014ம் ஆண்டே சமர்பித்தனர். இதில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 59 இந்துக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இது குறித்து விசாரிக்க 2002 ஆம் ஆண்டில் நரேந்திர மோடியால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது.
மூன்று நாள் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை “தேவையான திறமையும் ஆர்வமும் காட்டவில்லை” என்று காவல்துறையை குற்றம் சாட்டியுள்ளது. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை பரிந்துரைத்துள்ளது. சில இடங்களில் காவல்துறை கும்பல் வன்முறையை கட்டுபடுத்துவதில் மெத்தனம் காட்டியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள்ளது.