1000 பேர் கொலையான குஜராத் கலவரம், போலீஸ் மெத்தனம்தான் காரணம்.. முதல்வர் மோடிக்கு சம்பந்தமில்லை.

2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில் -அப்போதைய மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.நானாவதி கமிஷன் அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.டி. நானாவதி மற்றும் அக்‌ஷய் மேத்தா ஆகியோர் 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்த இறுதி அறிக்கைகளை 2014ம் ஆண்டே சமர்பித்தனர். இதில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 59 இந்துக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இது குறித்து விசாரிக்க 2002 ஆம் ஆண்டில் நரேந்திர மோடியால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது.

மூன்று நாள் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை “தேவையான திறமையும் ஆர்வமும் காட்டவில்லை” என்று காவல்துறையை குற்றம் சாட்டியுள்ளது. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை பரிந்துரைத்துள்ளது. சில இடங்களில் காவல்துறை கும்பல் வன்முறையை கட்டுபடுத்துவதில் மெத்தனம் காட்டியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள்ளது.

 

More News

எகிப்து வெங்காயம் யாருக்கும் பிடிக்கல.. வருந்தும் வியாபாரிகள்.

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வெங்காயத்தை மக்கள் விரும்பவில்லை எனவும்,

மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க..!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்

இந்த ஒரு நாளுக்காகத்தான் 25 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்: புதுமாப்பிள்ளை சதீஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்

விஷால் மீது சிம்பு தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும்,

இன்று முதல் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்': இரு முக்கிய நடிகர்கள் தாய்லாந்து விரைவு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு இன்று முதல்