இது 2000 ரூபாய் நோட்டா? ஜீரோ ரூபாய் நோட்டா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

பிரதமரால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை கடந்த பத்து நாட்களாக பொதுமக்கள் கால்கடுக்க வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். ஒருசிலர் வரிசையில் நிற்க பொறுமையில்லாமல் பழைய நோட்டுக்களை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம்.களில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் ரூ.2000 பணம் எடுத்த ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்த ரூ.2000 நோட்டில் 2 என்ற எண்ணே இல்லை. வெறும் 00 என்று இருந்தது. ஒரு நோட்டில் அந்த ஜீரோ கூட இல்லை. வெற்றிடமாக இருந்தது. இதை பார்த்து அவர் இது 2000 ரூபாய் நோட்டா? அல்லது ஜீரோ ரூபாய் நோட்டா? என்று கேட்டது பரிதாபமாக இருந்தது.
ரூ.2000 நோட்டு அவசரகதியில் அச்சடிக்கப்படுவதால் ஒருசில நோட்டுக்கள் சரியாக அச்சாகாமல் அரைகுறையாக அச்சடிக்கபட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனை சில புதிய 500 ரூபாய் நோட்டுகளிலும் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அன்பர்கள் அதில் 2000 என்று பிரிண்ட் ஆகியிருக்கின்றதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

More News

கமல் பிரிவிற்கு பின் கவுதமி வெளியிட்ட உண்மை

உலக நாயகன் கமல்ஹாசனுடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கையில் இருந்து சமீபத்தில் பிரிந்த நடிகை கவுதமி, தனது பிரிவிற்கான நீண்ட விளக்கத்தையும் சமீபத்தில் அளித்தார்.

விஷாலின் வீட்டில் விரைவில் திருமணம்

நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் விஷால் வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'விஜய் 61' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

ஏன் ஒரு பணக்காரர் கூட வங்கியின் வரிசையில் நிற்கவில்லை? சில அதிர்ச்சி தகவல்

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு சரியான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், எந்த நோக்கத்திற்காக அவர் அறிவித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுந்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏன் தெரியுமா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததில் இருந்து கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்ற தினந்தோறும் வரிசையில் நின்று வருவதை பார்த்து வருகிறோம்.