டிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

 

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக புதுப்புது திட்டங்கள் அமல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் அம்மா கோவிட்-19 கேர், சிறப்பு முகாம்கள், கொரோனாவுக்கு என தனி ஆம்புலன்ஸ் வசதி, தனிமைப்படுத்தப்படும் பகுதி எனப் பல்வேறு அம்சங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

அதேபோல நடமாடும் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் எனவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட மினி கிளினிக் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் எனத் தெளிவுப்படுத்தினார்.

மேலும், தமிழகத்தில் மருத்துவ வல்லுநர்கள் குழு கொடுக்கும் ஆலோசனைகள் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பட்டு உள்ளது. எனவே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவக் குழு கொடுத்த ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகங்கள் முறையாக பின்பற்றியதால் தமிழகத்தில் இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது. இதுவரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் 5,22,530 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது.

இதன்மூலம் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறிய பட்டார்கள். இதன் பலனாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப் பட்டது. நாட்டிலேயே கொரோனா தொற்று கண்டறிய அதிகளவில் ஆய்வகங்கள் அமைத்தது தமிழகம்தான். ஏற்கனவே அறிவித்தப்படி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2 ஆயிரம் நடமாடும் மினி கிளினிக்குகள் துவங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இந்த மினி கிளினிக்கில் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.