2,000 அம்மா மினி கிளினிக் திட்டம்… அடுத்தடுத்த திட்டத்தால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

 

தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளருடன் கூடிய 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். கொரோனா நேரத்தில் இத்தகைய மினி கிளினிக்குகள் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்து இருந்தனர். அதன் முதற்கட்டமாக இன்று 630 மினி கிளினிக்குகளின் சேவையை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்தார். அதில் 47 கிளினிக்குகள் சென்னை பகுதிகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 8-12 மணி வரையிலும் மாலை 4-8 மணி வரை செயல்படும் இந்த மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் என தலா ஒருவர் பணியாற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இத்தகைய மருத்துவமனைகளில் மக்கள் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்றவற்றை செய்து கொள்ளலாம் என்றும் சாதாரண சளி, காய்ச்சலுக்கு அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் கிராமப்புறங்களில் 1400 மினி கிளினிக்குகள் மற்றும் சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200 என மொத்தம் 2,000 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.