200 அடியில் பேனர்: ஆரம்பமாகிறது விஸ்வாசம் திருவிழா
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் திருநாள் விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் வெளிவரும் அஜித் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே அஜித்துக்கு 200 அடியில் பேனர் வைக்கும் பணி ஆரம்பமாகிவிட்டது. பேனர் அமைக்க சாரம் கட்டுவதற்கு தேவையான மரங்கள் இறக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓருசில நாட்களில் பிரமாண்டமாக பேனர் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் சர்கார் படத்தின் ரிலீசின்போது தளபதி விஜய்க்கு 175 அடி கட் அவுட் வைக்கப்பட்டது தெரிந்ததே. இதனையடுத்து அதனைவிட 25 அடி உயரத்தில் 200 அடியில் பிரமாண்டமாக இந்த கட் அவுட் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com