20 வயது நடிகையின் அம்மாவுக்கு பிறந்த குழந்தை.. ரசிகரின் கேள்விக்கு பதிலடி!
- IndiaGlitz, [Friday,November 25 2022]
20 வயதான நடிகையின் அம்மாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் இதுகுறித்து சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராதிகா இரண்டு வேடங்களில் நடித்த தொலைக்காட்சி தொடர் ’வாணி ராணி’ என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த தொடரில் தேனு என்ற கேரக்டரில் நடித்தவர் நேஹா மேனன் என்பதும் கேரளாவைச் சேர்ந்த இவருக்கு தற்போது 20 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேஹாவின் அம்மாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஒரு சிலர் காலேஜ் செல்லும் பெண் இருக்கும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்வது சரியா என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் அதற்கு நேஹா பதிலடி கொடுத்துள்ளார். காலேஜ் போற பொண்ணு இருந்தாலும் எந்த எந்த வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் இது போன்ற மனதை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நேஹா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தங்கையின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.