20 வருட சினிமா அனுபவம்… பூரிப்பில் பிரபல நடிகையின் கணவர் வெளியிட்ட வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
“இஷ்டம்“ எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா சரண் தற்போது சினிமா துறையில் தனது 20 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். இதையடுத்து அவரது கணவர் ஆண்ட்ரே கோசீவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பூரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். திறமையான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இவர் தெலுங்கு மற்றும் இந்தியிலும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, நித்யாமேனன் ஆகியோர் நடித்த ஆந்தலாஜி வகை திரைப்படமான “கமனம்“ இன்று திரைக்கு வந்திருக்கிறது. பெண் இயக்குநர் சுஜனாராவ் என்பவர் இயக்கிய இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் நடிகை ஸ்ரேயா திரை வாழ்க்கையில் தன்னுடைய 20 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார்.
முன்னதாக “கமனம்“ திரைப்படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சினிமாவிற்கு வந்தேன். தற்போது 20 வருட சினிமா வாழ்க்கையை நிறைவாக உணருகிறேன். மேலும் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது இப்போதும் புதுமுக நடிகையைப் போலவே என்னால் உணர முடிகிறது. என்னுடைய திரை வாழ்க்கைக்கு நாகேஷ்வர ராவ் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்பது போன்ற பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் “கமனம்“ திரைப்படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயாவின் 20 வருட சினிமா வாழ்க்கையை நினைவூட்டும் விதமாக வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது. அந்த வீடியோவை ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரேவ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com