20 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் 'ஒடியன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து இளமையாக காட்சி தரும் மோகன்லால், பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' படத்தில் இணைந்து நடித்த மோகன்லால்-பிரகாஷ்ராஜ், தற்போது 20 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜூம் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுவதாக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உறுதி செய்துள்ளார்

மேலும் இந்த படத்தில் மஞ்சுவாரியர், சித்திக், இன்னோசண்ட், நரேன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கு இசையமைக்கும் இந்த படத்தின் பின்னணி இசையை 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் அமைக்கின்றார்.

More News

ரஜினியுடன் கூட்டணி: சமிக்ஞை காட்டிய கமல்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு தனித்தனி கட்சிகள் ஆரம்பித்து வரவுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிப்படையிலேயே வேற்றுமை இருப்பதால் தனித்தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகமாக சம்பாதிப்பவன்: விஷால்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியை கட்டியணைத்து மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது: கமல்ஹாசன்

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றும், சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும்.

'பத்மாவத்' பிரச்சனை குறித்தும் சித்தார்த்தும், சித்தார்த் அபிமன்யூவும் கூறிய கருத்து

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு பின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.