சுய இன்பத்தால் நுரையீரல் பாதிப்பா? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

  • IndiaGlitz, [Monday,April 25 2022]

அதிகளவில் சுயஇன்பம் அனுபவித்த இளைஞர் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் வசித்துவந்த 20 வயது இளைஞர் ஒருவர் சுயஇன்பம் அனுபவித்தபோது அதிகளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நெஞ்சுவலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அதிகளவு சுயஇன்பம் அனுபவித்ததால் அவருக்கு நுரையீரலில் ஏற்படும் சப்டென்சியஸ் எம்ப்சிமா (Sub Cutaneous emphysemaspm) எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதாவது நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்று கசிந்து மூச்சுத்திணறலாக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர். இந்தப் பாதிப்பிற்கு அவர் தொடர்ந்து அதிகளவில் சுயஇன்பம் அனுபவித்து வந்ததும் காராணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு சுயஇன்பப் பழக்கத்தால் வெவ்வேறு தொல்லைகள் ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுயஇன்பம் அனுபவிக்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு குறித்து மேலதிக ஆய்வு தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுயஇன்பம் அனுபவிப்பது நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி நம்முடைய இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 வயது இளைஞர் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கவலை அளிக்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மருத்துவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு அதிகளவில் சிகிச்சை தேவைப்படாது. ஆனாலும் இது வித்தியாசமான அறிகுறியாக இருக்கிறது. அந்த இளைஞருக்கு ஆஸ்துமா இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறிய மருத்துவர்கள் அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்து என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.