ஓடும் ரயிலில் சாகசம் செய்த 20 வயது வாலிபர் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரயில் காலியாக இருந்தாலும் வாசலில் தொங்கிக் கொண்டே சென்று சாகசம் செய்வது இன்றைய இளைஞர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த சாகசத்தால் சிலசமயம் விலைமதிப்பில்லா உயிர் பலியாகி சோகமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் மின்சார ரயிலில் படியில் தொங்கி கொண்டே சாகசம் செய்த 20 வயது இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மும்பையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் திஷாத் என்பவர் சமீபத்தில் மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ரயிலில் வாசலில் நின்றுகொண்டு கம்பியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மற்றொரு கையை ஆட்டிக்கொண்டே சாகசம் செய்துவந்தார். இதை அவரது இன்னொரு நண்பர் மொபைலில் வீடியோ படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பத்தின் மீது திஷாத் மோதியதால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்த திஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரயிலில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடக்கூடாது என ரயில்வே துறையினர் ஒருபக்கம் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் இளைஞர்கள் தொடர்ந்து இதுபோன்ற சாகசங்களை செய்து தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். இனிமேலாவது ரயிலில் சாகசம் செய்யாமல் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com