உலகின் மிகப்பெரிய திரையரங்கில் '2.0' செய்த சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ளது. கிராண்ட் ரெக்ஸ் என்ற இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே பெரும்பாலும் திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம். அதன்பின் 'மெர்சல்' உள்பட ஒருசில தமிழ்ப் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் சில காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் கடந்த 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படமும் வெளியானது. இந்திய திரைப்படங்கள் இந்த திரையரங்கில் ஒரு நாள் திரையிடுவதே அரிதாக இருந்த நிலையில் '2.0' திரைப்படம் வரும் 8ஆம் தேதி சனிக்கிழமை வரை திரையிடப்படும் என கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 9 நாட்கள் ஒரு தமிழ்ப்படம் திரையிடுவது என்பதெல்லாம் தலைவர் படத்திற்கு மட்டுமே கிடைக்கும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
Après le succès dans nos salles du célèbre film Indian 2.0, le #GrandRex a décidé de rallonger sa diffusion avec des séances en #GrandLarge jusqu’au Samedi 8 Décembre!???? ????
— Le Grand Rex (@LeGrandRex) December 3, 2018
Tickets⬇https://t.co/WfFouB9Mom pic.twitter.com/xSRN9FrXWh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments