உலகின் மிகப்பெரிய திரையரங்கில் '2.0' செய்த சாதனை

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ளது. கிராண்ட் ரெக்ஸ் என்ற இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே பெரும்பாலும் திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம். அதன்பின் 'மெர்சல்' உள்பட ஒருசில தமிழ்ப் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் சில காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்த நிலையில் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் கடந்த 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படமும் வெளியானது. இந்திய திரைப்படங்கள் இந்த திரையரங்கில் ஒரு நாள் திரையிடுவதே அரிதாக இருந்த நிலையில் '2.0' திரைப்படம் வரும் 8ஆம் தேதி சனிக்கிழமை வரை திரையிடப்படும் என கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 9 நாட்கள் ஒரு தமிழ்ப்படம் திரையிடுவது என்பதெல்லாம் தலைவர் படத்திற்கு மட்டுமே கிடைக்கும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்த தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'பேட்ட' சிங்கிள் டிராக் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் அட்டகாசமாக அனிருத் இசையமைத்த 'மரண மாஸ் குத்து பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்.ஜி.கே புதிய அப்டேட்: தயாரிப்பாளர் தகவலால் ரசிகர்கள் குஷி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் செல்வாரகவன்

'96' ஜானுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபீசில் வசூலை அள்ளிக்குவித்தது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை

திருமணத்திற்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன விஜய் நாயகி

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில அறிமுகமான நடிகை ஜெனிலியா, விஜய் நடித்த 'சச்சின்' மற்றும் வேலாயுதம் உள்பட பலதிரைப்படங்களில் நடித்தார்.