'2.0' சீன ரிலீஸ் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான '2.0' திரைப்படம் சீனாவில் வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படம் சீனாவில் ஜூலை 12ல் ரிலீஸ் ஆவதை உறுதி செய்ததுடன், இந்த படம் சீனாவில் 56 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற ஆச்சரிய தகவலையும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்தே இந்தியாவில் 6900 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 2000 திரையரங்குகளிலும் என மொத்தம் 8900 திரையரங்களில்தான் வெளியானது. ஆனால் தற்போது சீனாவில் மட்டு 56ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தி உண்மையில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
#2Point0InChina ..on 56000 screens ... premiere on June 28th .. grand release on July 12th @shankarshanmugh @akshaykumar @rajinikanth pic.twitter.com/WSzj0tQo6e
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments