'2.0' சீன ரிலீஸ் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான '2.0' திரைப்படம் சீனாவில் வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படம் சீனாவில் ஜூலை 12ல் ரிலீஸ் ஆவதை உறுதி செய்ததுடன், இந்த படம் சீனாவில் 56 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற ஆச்சரிய தகவலையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்தே இந்தியாவில் 6900 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 2000 திரையரங்குகளிலும் என மொத்தம் 8900 திரையரங்களில்தான் வெளியானது. ஆனால் தற்போது சீனாவில் மட்டு 56ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தி உண்மையில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

அடிதடி ரகளை மூக்கில் ரத்தம்: நிச்சயதார்த்தம் ஆன நடிகர்-நடிகையின் பரிதாப நிலை!

நிச்சயதார்த்தம் முடிந்த நட்சத்திர ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் அடித்து ரகளை செய்ததால் காயம் ஏற்பட்டு தற்போது போலீஸ் கேஸ் ஆகியுள்ளது

'டிக்டாக்' வீடியோவால் சந்தேகம்: கல்லூரி பேராசிரியையை குத்தி கொலை செய்த கணவர்!

டிக்டாக் வீடியோவால் கல்லூரி பேராசிரியை ஒருவரை அவரது கணவரே குத்தி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது.

இனிமேல் பீரோவில் உள்ள பொருட்களை திருட முடியாது: கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வெளியூர்களுக்கு செல்லும்போது பெரும்பாலானோர்களின் கவலை பீரோவில் வைத்துள்ள பணம், நகைகள் ஆகியவை நாம் திரும்பி வரும்வரை பத்திரமாக இருக்குமா?

ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபகாலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரே ஒரு வரியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் வகையிலான பதிவுகளை பதிவு செய்து வருகிறார்.

தனுஷின் 'பக்கிரி' டிரைலர் விமர்சனம்

தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பக்கிரி' திரைப்படம் ஏற்கனவே பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது வரும் 21ஆம் தேதி முதல் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது.