உருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து உருத்தெரியாமல் மாறியுள்ள காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 25 பேர் எர்ணாகுளம், 4 பேர் பாலக்காடு, 19 பேர் திரிச்சூரை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு இன்று அதிகாலை கேரள மாநில அரசு சொகுசு பேருந்து ஒன்று 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராமல் மோதியது.
இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கி உருத்தெரியாமல் மாறியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 3 பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout