'விடுதலை' முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்படுகிறதா? 

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'விடுதலை’ திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

மேலும் 'விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியானது என்பதும், இந்த படம் வெளியாகி அங்கேயும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் 'விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான 'விடுதலை’ படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இவ்வாறு நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடியில் இணைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை ஓடிடியில் 'விடுதலை’ வெளியாகும் வரை பொறுமை காப்போம்.