ரஜினியின் '2.0': விண்ணை தொடும் வேற லெவல் புரமோஷன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக வேற லெவலில் அவருடைய படங்கள் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இந்திய திரையுலகில் முதல்முறையாக விமானத்தில் விளம்பரம் செய்த 'கபாலி' திரைப்படமே ஒரு சான்று
இந்த நிலையில் 'கபாலி'யை மிஞ்சும் அளவிற்கு கடந்த சில மாதங்களாக '2.0' படத்திற்கு பிரமாண்டமாக புரமோஷன் செய்யபப்ட்டு வருகிறது. ஏற்கனவே ஹாலிவுட்டில் பிரமாண்டமான பலூன் பறக்கவிடப்பட்டு புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதை அடுத்து துபாயில் உள்ள பால்ம் ஜுமேரா என்ற பகுதியில் 10000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் வீரர்கள் '2.0' படத்தின் போஸ்டர் பிடித்தவாறு பறந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் போஸ்டர் பத்தாயிரம் அடி உயரத்தில் பறப்பது ஒவ்வொரு ரஜினி ரசிகரும் தாங்களே விண்ணில் பறப்பது போல் பெருமிதம் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இன்று துபாயில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தின் பாடல்களை நேரடியாக நிகழ்ச்சி மேடையில் பாடவுள்ளார். ஹாலிவுட் பட விழாக்களையும் மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக இன்று இந்த விழா நடைபெறவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments