ரஜினியின் '2.0': விண்ணை தொடும் வேற லெவல் புரமோஷன்

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக வேற லெவலில் அவருடைய படங்கள் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இந்திய திரையுலகில் முதல்முறையாக விமானத்தில் விளம்பரம் செய்த 'கபாலி' திரைப்படமே ஒரு சான்று

இந்த நிலையில் 'கபாலி'யை மிஞ்சும் அளவிற்கு கடந்த சில மாதங்களாக '2.0' படத்திற்கு பிரமாண்டமாக புரமோஷன் செய்யபப்ட்டு வருகிறது. ஏற்கனவே ஹாலிவுட்டில் பிரமாண்டமான பலூன் பறக்கவிடப்பட்டு புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதை அடுத்து துபாயில் உள்ள பால்ம் ஜுமேரா என்ற பகுதியில் 10000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் வீரர்கள் '2.0' படத்தின் போஸ்டர் பிடித்தவாறு பறந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் போஸ்டர் பத்தாயிரம் அடி உயரத்தில் பறப்பது ஒவ்வொரு ரஜினி ரசிகரும் தாங்களே விண்ணில் பறப்பது போல் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இன்று துபாயில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தின் பாடல்களை நேரடியாக நிகழ்ச்சி மேடையில் பாடவுள்ளார். ஹாலிவுட் பட விழாக்களையும் மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக இன்று இந்த விழா நடைபெறவுள்ளது.

More News

இலங்கை அரசியலிலும் புயலை கிளப்பிய 'மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒருசில வசனங்களை நீக்க கோரி தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

ஜிவி பிரகாஷின் 'குப்பத்து ராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவர். ஒரே நேரத்தில் சுமார் அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து வரும் இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று குப்பத்து ராஜா'

ஆக்ஸ்போர்டு அகராதியின் உதாரணத்தில் அஜித் பெயர்

உலகம் முழுவதும் அகராதி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆக்ஸ்போர்டு அகராதி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் பல மொழிகளில்

இதுக்காவது அனிதா பெயர் வையுங்கள்: அரசுக்கு அரவிந்தசாமி வேண்டுகோள்

சமீபத்தில் மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்

கந்துவட்டி கொடுமையால் கடுமையாக பாதிகப்பட்ட சின்னத்திரை நடிகை புகார்

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு பின்னர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாத பலர் தற்போது தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.