கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும் மட்டுமே பொதுமக்களுக்கு கடவுளாக தெரிகின்றனர். மருத்துவர்கள் தங்கள் வீடு குடும்பம் ஆகியவற்றை மறந்து நாட்கணக்காக விடுமுறை இன்றி மருத்துவமனையில் சேவை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு சில இடங்களில் மருத்துவர்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் மருத்துவர்களை தற்போது போற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வார்டில் சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த பெண் ஒருவர் வீடு திரும்பிய போது அவருக்கு அவருடைய அப்பார்ட்மெண்டை சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறப்பான மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளித்தனர்
அந்த பெண் மீது மலர்கள் தூவியும் அவரை வரவேற்றனர். இந்த காட்சிகளால் நெகிழ்ந்து போன அந்தப் பெண் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற 20 நாட்கள் தொடர்ச்சியாக பணி செய்த அந்த பெண்ணுக்கு தகுந்த மரியாதை செய்யப்பட்டுள்ளது மருத்துவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது
Sometimes you have to thank #WhatsApp - this clip that gave a lump in my throat. ?? The lady was working nonstop 20 days in ICU of a hospital where #COVID19 patients were treated.
— Manoj Kumar (@manoj_naandi) April 29, 2020
See the way her apartment folks & family welcomed her! This is the new normal Re-set I seek. ♥️ pic.twitter.com/Wm2ZRquxxy