என்ன நடக்கப் போகிறது தமிழகத்தில்? துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 24 2016]

சமீபத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்திலும் சோதனை நடைபெற்றது. வரிமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அவர்களுக்கு பாதுகாப்பாக துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திடீரென கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவுள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் கூடுதலாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலர் மீது விரைவில் சோதனை நடத்தப்படலாம் என புலனாய்வு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் தமிழகம் மேலும் ஒரு பரபரப்பிற்கு தயாராகி வருகிறது.

More News

விஜய் படத்தை பார்த்து அழுத சமந்தாவின் காதலர்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறவுள்ளது.

தீவிரவாதிகளால் பயணிகள் விமானம் கடத்தல். 118 பயணிகள் கதி என்ன?

லிபியா நாட்டை சேர்ந்த அப்ரிகியாஸ் ஏர்பஸ் A320 விமானம் இன்று லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தது.

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ். காவேரி மருத்துவமனை அறிக்கையின் முழுவிபரம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூடும் இடம்-தேதி குறித்த முக்கிய தகவல்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வகித்து வருகிறார்.

ராம்மோகன் ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ். இன்று ஆஜராக உத்தரவு

முன்னள் தலைமைசெயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.