ரஜினியின் '2.0' இசைவெளியீட்டு விழா! துபாய் அரசர் கலந்து கொள்கிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலான Burj- Al - Arabல் நடைபெறவுள்ளது.
இசை வெளியீட்டுக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 26ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.
2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
- 2.0 படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்
- பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குநர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.
- 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.
- துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com