ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்க மீட்புப்படையினர் போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். சுமார் 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது குழந்தை பத்தடி ஆழத்தில் சிக்கி உள்ளதாக தெரிகிறது
கட்டட தொழிலாளி பிரிட்டோ என்பவரின் மகனான இந்த குழந்தைக்கு முதல் கட்டமாக ஆக்சிஜன் வழங்கும் பணியினை மீட்பு படையினர் செய்து வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்பது சவாலான விஷயம் என்றாலும் குழந்தை பத்தடி ஆழத்தில் மட்டுமே இருப்பதால் குழந்தையை காப்பாற்றி விடலாம் என்று மீட்பு படையினர் கருதுகின்றனர்
ஆள்துளை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெயர் சுர்ஜித் என்றும் அந்த குழந்தை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள வீட்டின் அருகே கிணறு மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாகவும் இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout