வாய் பேசமுடியாத வயதில் இந்தியச் சாதனை… கலக்கும் நம்ம ஊரு சிறுவன்!!!
- IndiaGlitz, [Thursday,November 19 2020]
தேனி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 21/2 வயது சிறுவன் தன்னுடைய அபாரமான நினைவு ஆற்றலால் இந்திய அளவில் சாதனை சிறுவன் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறான். இதனால் கலாம் விஷன் இந்தியா 2020 எனும் சாதனை பட்டம் அவனுக்கு கிடைத்து இருக்கிறது. வாய்கூட சரியா பேசமுடியாத இந்த வயதில் இந்திய அளவில் சாதனை படைத்த இச்சிறுவனை அந்த ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜீவமாணிக்கம்-திவ்யா தம்பதியினரின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா. இவனது ஒரு வயது முதலே அபராமான நியாபகச் சக்தி இருப்பதை உணர்ந்த பெற்றோர் பல்வேறு நாட்டின் கொடி, அதன் அதிபர்கள், இந்திய அமைச்சர்கள், பல நாடுகளின் வித்தியாசமான விமானங்களின் பெயர்கள் போன்றவற்றை அவனுக்கு அறிமுகப்படுத்தினர். அதை தொடர்ந்து நினைவில் வைத்திருந்த ரினேஷ் தற்போது தன்னுடைய அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தி புதிய சாதனையை படைத்து இருக்கிறான்.
ஒரு நாட்டின் கொடியைக் காட்டினால் கொஞ்சமும் தயங்காமல் உலக வரைபடத்தில் அந்த நாட்டை காட்டுவதோடு அதன் அதிபர் யார் என்பதையும் ரினேஷ் நொடிப் பொழுதில் சொல்லி விடுகிறான். இதனால் இந்திய அளவில் கலாம் விஷன் இந்தியா 2020 என்ற பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.