சினிமா ஆசை காட்டி நரபலி.. 56 துண்டுகளாக வெட்டி மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி!

  • IndiaGlitz, [Wednesday,October 12 2022]

சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரர் ஆக்கி காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி 2 பெண்களை நரபலி கொடுத்த தம்பதி மற்றும் போலி மந்திரவாதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தை சேர்ந்த பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகிய இருவரும் பத்தனம்திட்டா என்ற பகுதியில் லாட்டரி விற்பனை தொழில் செய்து வந்தனர். இவர்களிடம் அணுகிய போலி மந்திரவாதி ஒருவர் இருவரையும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார்

பத்தனம்திட்டா பகுதியில் உள்ள லைலா - பகவத் சிங் ஆகிய தம்பதிகளிடம் இரண்டு பெண்களையும் மந்திரவாதி அழைத்துச் சென்ற நிலையில் இந்த தம்பதிக்கு செல்வம் கொழிக்கவும் உடல்நலம் நன்றாக இருக்கவும் பூஜை செய்துள்ளனர். பூஜையின் முடிவில் இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்துள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து அந்த இரண்டு பெண்களின் உடல்களை 56 துண்டுகளாக வெட்டி மந்திரவாதியின் பேச்சை கேட்டு அந்த தம்பதியினர் சாப்பிட்டுள்ளனர். மீதி உள்ள துண்டுகளை வீட்டின் தோட்டத்தில் புதைத்துள்ளதாக தெரிகிறது

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் போலி மந்திரவாதி மற்றும் லைலா-பகவந்த் சிங் தம்பதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்கட்ட விசாரணையில் போலி மந்திரவாதி ஷபி என்பவர் ஒரு மனநோயாளி என்றும் அவர் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மனித கறி சாப்பிட்ட தம்பதிகள் பேராசை காரணமாக போலி மந்திரவாதியின் பேச்சை கேட்டு இந்த விபரீத செயலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.