கமல்ஹாசனின் தமிழ் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தை நடத்தவுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்காக சென்னை அருகேயுள்ள ஈபிவி தீம் பார்க்கில் வீடு ஒன்று தயாராகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 விஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர்கள் இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு கிரிக்கெட் பிரபலங்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பு இல்லாமல் இந்த வீட்டில் விஐபிக்கள் தங்க வைக்கப்பட உள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள வீடு, இந்தி 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட வீட்டை விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியில் சல்மான்கான் நடத்திய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட சிறப்பாக கமல்ஹாசன் தமிழில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷால் அதிரடி முடிவால் அஜித்-விஜய் படங்களுக்கு சிக்கல்?

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய நடிகர் விஷால், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

விவேகம் படத்தின் வியக்க வைக்கும் வியாபாரம் ஆரம்பம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

'பாகுபலி 2' படத்தில் தமிழின விரோதி: பிரபல இசையமைப்பாளர் கருத்து

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது.

கேரள பூரம் திருவிழாவில் ஆஸ்கார் நாயகனின் புதிய முயற்சி

கேரள மாநிலத்தில் நடைபெறும் 'பூரம்' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரிசையாக நிற்கும் யானைகள், விதவிதமக ஒலிக்கப்படும் இசை, பட்டாசுகளின் வாண வேடிக்கை ஆகியவை இந்த திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்

ஜெயலலிதா செய்தது மிகபெரிய தவறு! நாஞ்சில் சம்பத்

தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுகவில் தினகரன் அணியை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.