இந்த நாட்டில் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்- முன்னணி நிபுணர் கூறிய அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் மகக்ள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஹார்ட்வோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமை நோய் மருத்துவ நிபுணராக இருக்கும் ஆஷ்ஸ் ஜா இந்தத் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதுவரை அமெரிக்காவில் 20 லட்சத்தை தாண்டி நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 1.12 லட்சம் மக்கள் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் பல மாகாணங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. மக்கள் சமூக இடைவெளியை மறந்து வெளியே சுற்ற ஆரம்பித்து விட்டனர். இதனால் ஹரிசோனா, புளோரிடா, டெக்சாஸ், நார்த் கரோலினா போன்ற பகுதிகளில் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 800 அல்லது 900 பேர் கொரோனா நோய்த்தொற்றல் உயிரிழக்கின்றனர். இந்த கணக்குப் படி ஒரு மாதத்தில் உயிரிழப்பு 27 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இந்நிலைமை செப்டம்பர் மாதம் வரை நீடித்தால் உயிரிழப்பு கண்டிப்பாக 2 லட்சத்தை தாண்டும் என எச்சரித்து உள்ளார். கொரோனா நோய்த்தொற்று, உயிரிழப்பு என இரண்டும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் அதைப் பற்றிய அதீத கவலை யாரிடம் இல்லை என்ற வருத்தத்தையும் ஆஷ்ஸ் ஜா வெளிப்படுத்தி இருக்கிறார். உட்டோ, அரிசோனா போன்ற மாகாணங்களில் இதுவரை 40 விழுக்காட்டு மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. புளோரிடாவில் கடந்த 5 வாரத்தில் அதிக நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 45,690 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது நியூயார்க், கனெக்டக்ட், மசாசூசெட்ஸ் போன்ற பகுதிகளில் சற்று கொரோனா எண்ணிக்கை குறைந்து இருககிறது. வரப்போகும் கோடைக்காலம் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் அதுவும் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறுப்புக்கு எதிரான போராட்டங்களினால் கொரோனா அதிகமாகி இருக்கிறது என்ற தகவலையும் ஆஷ்ஸ் ஜா கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் இனவெறுப்பு போராட்டங்களின்போது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தார்கள். அந்தக் காரணங்களால் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout