2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று; ஜப்பானில் தனிமைப் படுத்தபட்ட கப்பல், நிலைமை என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பான்- யோகோஹோமா துறைமுகத்தில் தனிமைப் படுத்தப் பட்ட “டைமண்ட் பிரின்சஸ்” சொகுசு கப்பலில் பயணம் செய்த 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஜெய்சங்கர் “டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் கப்பல் பணியாளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. தற்போது கப்பல் ஊழியர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்’‘ எனத் தெரிவித்து உள்ளார்.
பிப்ரவரி மாத முதல் வாரத்தில் ஹாங்காங்கில் இருந்து டோக்கியோவிற்கு 3700 பயணிகளைக் கொண்ட ஒரு சொகுசு கப்பல் வந்தது. இந்தப் பயணிகள் கப்பல் கரைக்கு வருவதற்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் பரவியிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. எனவே இதைக் கட்டுப் படுத்தும் நோக்கத்தில் கப்பல் யோகோஹொமா துறைமுகத்தில் இருந்து சிறிது தொலைவில் தனிமைப் படுத்தப் பட்டது. முதல் வாரத்திற்குப் பின்னர் இந்தக் கப்பல் கரையை கடந்து விடும் என எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில், வைரஸ் தொற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்தக் கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்தப் பட்டுள்ளது.
முதலில் 61 வயதான மசாகோ இஷிடா என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்துப் பயணிகளுக்கும் தெர்மா மீட்டர் வழங்கப் பட்டு 37.4 டிகிரி (99.5 fahrenheit) க்கு மேல் உடல் வெப்ப நிலை இருந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப் பட்டது. நோய் தொற்று கண்டுபிடிக்கப் பட்ட மனிதருடன் தொடர்புடைய பகுதிகளில் இருந்த 279 பேரை மருத்துவர்கள் தனிமைப் படுத்தினர்.
பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கப்பலில் 64 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. நேற்று ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரி கப்பலில் பரவியுள்ள கொரோனா வைரஸின் எண்ணிக்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். கப்பலில் இதுவரை 218 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
வருகிற ஜுலை மாதத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க விருக்கிற நிலையில் ஜப்பான் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனையும் தற்போது தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
பயணிகள் தாங்கள் தனிமைப் படுத்தப் பட்டிருப்பது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தாலும் தங்களது நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களுக்குத் தொடர்ந்து அலைபேசிகள் மூலமாகச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
கப்பலில் வைரஸ் தொற்று இருப்பதாக அறியப் பட்ட குழு முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மற்ற குழுவினர் அவ்வபோது நல்ல காற்றை சுவாசிப்பதற்காக அறைகளை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப் படுகின்றனர். கப்பலில் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப் படுவதாகவும் ஆனால் கொரோனா பாதிப்பு குறித்துத் தாங்கள் பயப்படுவதாகவும் பயணிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
“டைமண்ட் பிரின்சன்ஸ்” கப்பலில் இருந்து தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது நண்பர்களுக்கு ஒரு வாட்ச் அப் செய்தியை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில், கப்பலில் 100 இந்தியர்கள் இருப்பதாகவும் அதில் 6 பேர் தமிழர்கள் என்றும் தெரிவித்து இருந்ததாகக் கூறப்பட்டது. அன்பழகன் அனுப்பிய வீடியோவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் இதில் தலையிட்டு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, மு.க. ஸ்டாலின் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஜப்பான் நிலவரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, கம்போடியா, ஹாங்காங் நாடுகளிலும் சில கப்பல்கள், கரைக்கு அனுமதிக்கப் படாமல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் கப்பல்களில் வைரஸ் தொற்று எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com