கொரில்லாவிற்கும் கொரோனா பாதிப்பு… தொடரும் பட்டியல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது. உயிரிழப்பு 20 லட்சத்தை தொடப்போகிறது. இந்நிலையில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களை மட்டுமே தாக்கிய கொரோனா பாதிப்பு கடந்த ஜுன் மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் முதன் முதலாக புலிகளுக்கு ஏற்பட்டது
இதையடுத்து விலங்குகளிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. ஆனால் மனிதர்களிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று விலங்குகளை தாக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பூங்கா மற்றும் கால்நடை பராமரிப்பு விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து நாய், பூனை போன்ற சில வீட்டு விலங்குகளையும் இத்தொற்று தாக்கியது.
இதில் இருக்கும் ஒரே நிம்மதி விலங்குகளை தாக்கும் கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை எந்த விலங்குகளும் உயிரிழக்கவில்லை. மாறாக சுவாசக்கோளாறு, உடல் நலப்பாதிப்பு போன்ற சிறு பாதிப்புடன் இத்தொற்று முற்றுப் பெற்று விடுகிறது. இப்படி புலி, பூனை, நாய் எனத் தொடர்ந்த பட்டியலில் சிங்கம், அடுத்து கீரி போன்ற விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் சான்டீகோ நகரில் உள்ள சபாரி பூங்காவில் வாழும் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதிப்பு பூங்காவில் பணியாற்றிய ஊழியர்களிடம் இருந்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout