மலையுச்சியில் சாகசம் செய்த போதை வாலிபர்கள். உடல்கூட கிடைக்காத பரிதாபம்

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

நார்மலாக இருக்கும் பலர் குடித்துவிட்டால் இரண்டு மனிதராக மாறிவிடுகின்றனர். குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பலர் உயிரை விட்ட பரிதாப சம்பவங்கள் பல உண்டு.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆம்பொலி சுற்றுலா தளத்தில் 2 இளைஞர்கள் குடிபோதையில் செய்த விபரீதமான சாகசம் உயிரை பலிகொண்டது மட்டுமின்றி உடலை கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு இளைஞர்களும் மலையுச்சியில் தடுப்பு சுவரையும் தாண்டி போதை தலைக்கேற ஒருவருக்கொருவர் சாகசம் செய்ய, அதை உற்சாகப்படுத்தி மற்றவர்கள் அந்த சாகசகத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் தடுமாறி மலையுச்சியில் இருந்து கீழே விழுந்துவிட்டனர். மேகங்கள் சூழ்நத அந்த பள்ளத்தாக்கில் அவர்கள் எங்கு விழுந்தார்கள் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுடைய உடலைக்கூட மீட்பது கடினம் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலா செல்வது இயற்கை காட்சிகளை கண்டு மனதிற்கு மகிழ்ச்சியை தேடி கொள்வதற்கு தானே தவிர, இப்படி குடித்துவிட்டு உயிரை இழப்பதற்கு அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் எப்போது புரிந்து கொள்ள போகின்றார்களோ தெரியவில்லை.

More News

ஓவியாவுக்கு ஆரவ் முத்தம் கொடுத்தது உண்மையா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பைத்தியமாக நடிக்கத்தான் செய்தனர். ஆனால் பார்வையாளர்கள் பலருக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது.

இனிமேல் சைலண்ட் மோட் தான்: ஆர்த்தியின் திடீர் முடிவு ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நடிகை ஆர்த்தி, வெளியே வந்தபின்னரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பெப்சி வேலைநிறுத்தத்தில் திடீர் திருப்பம்: ஆர்.கே.செல்வமணி முக்கிய அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிம்புவின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற டெக்னீஷியன்

சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அழகானவன்' படத்திற்கு பின்னர் அவருடைய அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார்...