ஒரே படத்தில் இரண்டு வெற்றி பட இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள 'ரா ரா ராஜசேகர்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ளார். பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ள இந்த படத்தை தயாரிக்க உள்ளவர் 'கோலிசோடா', '10 எண்றதுக்குள்ள மற்றும் 'கடுகு' ஆகிய படங்களை இயக்கியவரும் பாலாஜி சக்திவேலின் நண்பருமான விஜய் மில்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இந்த படத்தில் ஒளிப்பதிவும் செய்கிறார் விஜய் மில்டன்.

வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், ஒரு கொலை அதனால் ஏற்படும் சோகம் தான் இந்த படத்தின் கதை என்றும், வழக்கம்போல் இந்த படத்திலும் பல புதுமுகங்களை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் பாலாஜி சக்திவேல் கூறியுள்ளார். ஒரே படத்தில் இரண்டு வெற்றி பட இயக்குனர்கள் இணைந்துள்ளதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.