விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு வாயுக்கசிவு விபத்து: 2 பேர் உயிரிழப்பு மற்றும் அதிர்ச்சி நிறைந்த தகவல்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்த விஷவாயு கசிவு சம்பங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அதிச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பர்வாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவு சம்பவத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பர்வாடா பகுதியில் நேரு பார்மா சிட்டி வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான மருந்து நிறுவனத்தில் பென்சிமிடோசோல் என்ற வாயு கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பென்சிமிடோசோல் மிகவும் அடர்த்தி நிறைந்தது என்பதால் காற்றில் அதிகமாக பரவுவது தடுக்கப் பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வாயுக் கசிவு ஏற்பட்ட உடனே அந்த மருந்து நிறுவனம் ஊழியர்களை விசாகப் பட்டிணத்தில் உள்ள RK மருத்துவமனையில் அனுமதித்தாகவும் அவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் பகுதியை ஆய்வுச் செய்து வரும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளனர். வாயு காற்றில் அதிகமாக கலக்க வில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னாள் விசாகப்பட்டினத்தின் குர்னூல் என்ற பகுதியில் அமோனியா வாயுகசிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மோனியா அடர்த்தி குறைவு என்பதால் சேதம் அதிகமாக இருந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. அமோனியா போன்றில்லாமல் தற்போது பரவியிருக்கும் பென்சிமிடோசோல் அடர்த்தி அதிகம் என்பதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென் கொரியாவிற்குச் செந்தமான ALG பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஸ்டைரின் விஷவாயு தாக்கியதால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளையும் அனுபவித்தனர். அச்சம்பவத்தை அடுத்து விசாகப்பட்டினத்தில் அடுக்கடுக்காக வாயுக்கசிவு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருவதால் அப்பகுதியில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments