போலீஸ் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பாலி.. 11 பேர் படுகாயம் CAB
Send us your feedback to audioarticles@vaarta.com
அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அசாம், திரிபுராவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானார் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால் அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
arul sudha
Contact at support@indiaglitz.com