பிலிப்பைன்ஸில் ஒரேநாளில் அடுத்தடுத்த 2 குண்டுவெடிப்பு!!! குலைநடுங்கும் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 12 மணி மற்றும் 1 மணி என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இராணுவ அமைச்சகம் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள மாகாணம் ஒன்றில் பரபரப்பான சந்தை மற்றும் சர்ச்சில் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

இதனால் 11 உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொது மக்கள் மட்டுமல்லாது இச்சம்பவங்களால் இராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களால் நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒரு பெண் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை உலகின் எந்தவொரு அமைப்பும் இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்நாட்டின் இராணுவம் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.