அமெரிக்கா: மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

இந்தியாவை சேர்ந்த சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 6ஆம் தேதி அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகினர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மாயமான இந்தியரின் குடும்பத்தினர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தீப்பின் மனைவி செளம்யாவின் உடலை சமீபத்தில் போலீசார் கைப்பற்றினர். மேலும் இவர்கள் சென்ற காரின் சில பகுதிகளும், காரில் இருந்த சில பொருட்களும் மீட்கப்பட்டது. இதனையடுத்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள் சென்ற கார் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சந்தீப் மற்றும் அவரது மகள் சாச்சி ஆகியோர்களது உடல்களும் மீட்கப்பட்டன. இந்த இரண்டு உடல்களும் காணாமல் போன காரில் இருந்ததாகவும், இந்த கார் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கியதாகவும் அமெரிக்க போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் மகன் சித்தாந்த்தை போலீசார் தேடி வருகின்றனர். சித்தாந்த் ஒருவராவது உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சந்தீப் மகன் சித்தாந்தை கண்டுபிடிக்க உதவிசெய்யுமாறு அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தள பயனாளிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய்ப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் முதல் சமீபத்தில் 'சவரக்கத்தி' படம் வரை நடித்த நடிகை பூர்ணா நடிக்கும் அடுத்த படம் பிரமாண்டமான பேய்ப்படமாக தயாராகி வருகிறது.

பிரபல பாடலாசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

தளபதி விஜய், பாடலாசிரியர் விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

10, 11, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் கர்நாடகக் காவியின் தூதுவர்: பாரதிராஜா

கடந்த சில நாட்களாக இயக்குனர் பாரதிராஜா உள்பட ஒருசில இயக்குனர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேசுவதை விட ரஜினியை தாக்குவதில் அதிக நோக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன்: சன்னிலியோன் குறிப்பிட்டது யாரை?

ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் குஜராத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சி மேல் அளித்து வருகிறது.