அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது. அதுமட்டுமின்றி ஆன்லைனில் முன்பதிவு செய்தால் அதற்கு தனியாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங், ஸ்னாக்ஸ் எல்லாம் சேர்த்தால் ஒரு நபர் ஒரு திரைப்படம் பார்க்க ரூ.300க்கு மேல் ஆகிறது.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் திரையரங்குகளில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டும் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை அபிராமி திரையரங்கம் அதிரடி புதிய முயற்சியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு தனியாக ரூ.160 செலவு செய்யும் நிலை இனி அபிராமியில் கிடையாது. இந்த நடைமுறையை அனைத்து திரையரங்குகளும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதுபோன்ற சலுகைகளை அறிவித்தால் பொதுமக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.

கதிராமங்கலம் மக்களுக்காக உயிரையே கொடுக்க துணிந்த டிராபிக் ராமசாமி

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

எல்லா கேள்விகளுக்கு இன்று பதில்: பிக்பாஸ் கமல் அறிவிப்பு

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பமாகி இன்று ஒரு மாநிலமே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிக்கும் அளவுக்கு உள்ளது.

கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி ரகுராம் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.