'96' படத்தின் பாதிப்பு: 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள்

  • IndiaGlitz, [Sunday,December 30 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் உள்ள பல காட்சிகள் கிட்டத்தட்ட நம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். பசுமரத்தாணிபோல் பதிந்த பள்ளிப்பருவ காலம் மீண்டும் வராதா? என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் இந்த படத்தை பார்த்தவுடன் எழுந்ததால் தான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த படத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் சந்திப்பு அதன் பின் நடைபெறும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. இந்த நிலையில் இந்த படத்தில் வரும் இதே காட்சிபோல் ஒரு உண்மையான சம்பவம் தற்போது நடந்துள்ளது. கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்த மாணவர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் 40 ஆண்டுகள் கழித்து சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 1978ஆம் ஆண்டு கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்த மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தனர். தங்கள் படித்தபோது நிகழ்ந்த அனுபவங்கள் படிப்புக்கு பின் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து ஒருவருடன் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி தங்களை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவிய இந்த கல்லூரிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் இந்த விழா நடைபெற்றது. தற்போது ஐஏஎஸ் உள்ளிட்ட பெரிய பொறுப்பில் இருக்கும் இந்த முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவர்களின் முன்னேற்றம் குறித்தும், அவர்களுக்காக தாங்கள் செய்ய வேண்டிய கடமை குறித்தும் திட்டமிட்டுள்ளனர். ஒரு திரைப்படம் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் இதைவிட அந்த படத்திற்கு கிடைக்கும் பெருமை வேறு எதுவும் இல்லை.

More News

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்துரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்ப்பிணிக்குக்

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிபிராஜ்

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனை ஏறபடுத்திய திரைப்படம் 'நாய்கள் ஜாக்கிரதை

அஜித் ரசிகர்கள் மீது பி.ஆர்.ஓவிடம் புகார் கூறிய கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதும் அதற்கு நெட்டிசன்களிடம் இருந்து விமர்சனம் பெறுவதும் வழக்கமான ஒன்றே

நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் கேமிரா: தனியார் மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் கேமிரா வைத்த துப்புரவு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

17 மாடிகள், 10 திரையரங்கம்: புத்துயிர் பெறுகிறது அபிராமி மெகா மால்

சென்னையில் அடையாளங்களில் ஒன்று அபிராமி மெகா மால். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திரையரங்க வளாகம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது.