ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தில் 60 வருடங்களுக்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தில் 60 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல நடிகர், இயக்குனர் லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் ’பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பாடல் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆனந்தன் நடிப்பில் வெளியான ’வீரத்திருமகன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதும் இந்த பாடலை பிபி ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ் ஜானகி ஆகியோர் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் இன்றளவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது
கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்று ‘ருத்ரன்’ படத்தில் இடம் பெறுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com