சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த கட்டிங்கள்… ஒரே நாளில் 196 முறை நில அதிர்வு.. காண சகிக்காத நிகழ்வு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
துருக்கியில் நேற்று அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது 7.0 ரிக்டர் அளவாகக் கணிக்கப்பட்ட நிலையில் நிலநடுக்கத்திற்கு பிறகு 196 முறை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக செய்தி வெளியிட்டு உள்ளது. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத நடைமுறையாக நிலநடுக்கத்திற்கு பின் மீண்டும் பலமுறை நில அதிர்வுகள், அதுவும் நாடு முழுவதும் பல இடங்களில் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலநடுக்கத்தால் கடற்கரை ஓரமாக இருந்த இஸ்மீர் எனும் பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டு இருக்கறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த சம்பவம் அங்குள்ளோரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. இந்த இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருப்போரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நிலநடுக்கத்திற்கு பின் உணரப்பட்ட நில அதிர்வில் 4 ரிக்டர் அளவில் மட்டும் 23 முறை நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மேலும் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து இருக்கின்றன. இதனால் 20 அடுக்குமாடி கட்டிடங்கள் முழுவதும் சரிந்து விழுந்து இருக்கிறது. அதில் பல மாயமாகி உள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 419 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதேபோல இஸ்மீர் பகுதியில் ஏற்பட்ட கட்டிடப் பாதிப்புகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 786 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. துருக்கியில் ஒரேநாளில் ஏற்பட்ட இத்தனை மாற்றங்களால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments