தனுஷின் 'D50' படத்தில் 19 வயது அஜித் பட நடிகை.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து இயக்கி வரும் 50வது திரைப்படமான ‘D50’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த 19 வயது அனிதா சுரேந்திரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது அவர் 50வது படத்தில் நடித்து இயக்கி வருகிறார். ’ராயன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான், துஷாரா விஜயன், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் வடசென்னை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்தின் ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர் ’பிடி சார்’ ’வாசுவின் கர்ப்பிணிகள்’ உட்பட 3 தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷின் ‘D50’ படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com