'தளபதி 68' படத்தில் விஜய்க்கு ஜோடி 19 வயது நடிகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தில் 19 வயது நடிகை தான் நாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 68’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் தான் ’தளபதி 68’ படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தில் நாயகி ஆகவேண்டும் என முன்னணி நடிகைகள் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் கோபிசந்த் மனதில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அவர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’உப்பென்னா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, அதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘தி வாரியர்’ மற்றும் சமீபத்தில் வெளியான வெங்கட் பிரபுவின் ’கஸ்டடி’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர் ’கஸ்டடி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ’விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை’ என்று கூறியிருந்தார். மேலும் த்ரிஷா தான் தனது ரோல் மாடல் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தில் நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு 19 வயது கீர்த்தி ஷெட்டிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments