'மிஸ் இந்தியா' அழகி பட்டம் வென்ற 19 வயது கல்லூரி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!
- IndiaGlitz, [Sunday,April 16 2023]
ஒவ்வொரு ஆண்டும் 'மிஸ் இந்தியா’ அழகி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு 71வது மிஸ் இந்தியா அழகி பட்டத்திற்கான இறுதிப் போட்டி நேற்று இரவு நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த இந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி நந்தினி குப்தா என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
ராஜஸ்தானில் உள்ள லாலா லஜபதி ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வரும் 19 வயது நந்தினி குப்தா 10 வயதிலிருந்து மாடலிங் துறையில் இருந்து வருகிறார் என்பதும் மிஸ் இந்தியா பட்டத்திற்காக அவர் ஒரு சில ஆண்டுகள் தீவிரமாக முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இரண்டாவது இடத்திற்கு டெல்லியை சேர்ந்த ஸ்ரேயா பூஜா என்பவரும் மூன்றாவது இடத்தை மணிப்பூரைச் சேர்ந்த தோனோ ஜாம் ஸ்ட்ரெலா லுவாங் என்பவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் இந்தியாவின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான பட்டத்தை வென்ற நந்தினி குத்தாவுக்கு வாழ்த்து கூறி கூறி இருப்பதாவது:
”உலகமே அவள் வருகிறாள்...வசீகரத்தால், தனது அழகாலும் அனைவரின் நெஞ்சங்களை வென்றார். அவர் உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் மிஸ் இந்தியா 2023 பட்டம்” என பதிவு செய்யப்பட்டுள்ளது.